நாளை சூரசம்ஹாரம்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கலெக்டர் உத்தரவு!

 
விடுமுறை
நாளை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாக்காளில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா. கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

சஷ்டி

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நவம்பர் 7 ம் தேதி நடைபெறுகிறது. இதனை நேரில் காண தமிழகம் முழுவதும் பல்வேறுப குதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

திருச்செந்தூர் முருகன்

நாளை இன்னும் அதிகளவில் அலைகடலென பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதியும், உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாகவும் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

 

From around the web