நாளை கந்தசஷ்டி விரதம் 6ம் நாள் சூரசம்ஹாரம்... அதிகாலையில் காப்பு கட்டுங்க!
கந்தசஷ்டியின் ஐந்து நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஆறாம் நாளான நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்த நாள் என்பதால், இந்த நாளில் ஒருநாள் சஷ்டி விரதம் இருப்பது மிகப் புனிதமானதாக கருதப்படுகிறது. அனைத்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் நாளை மட்டும் விரதம் இருந்து முருகனை வழிபடலாம்.

ஆறாம் நாள் அதிகாலையில் எழுந்து குளித்து, அருகிலுள்ள கோவிலில் காப்பு கட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரை விரதத்தை தொடங்க வேண்டும். நாள் முழுவதும் தண்ணீர் தவிர உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது. மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வழிபடலாம். வீட்டில் ஷட்கோண கோலம் போட்டு, அதில் 6 நெய் விளக்குகள் ஏற்றி காலை, மாலை இரு வேளையும் வழிபாடு செய்ய வேண்டும்.

முருகனுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் உட்பட 6 வகையான நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும் சூரசம்ஹாரம் நேரம் வழிபாட்டிற்கு உகந்ததாகும். சூரசம்ஹாரம் முடிந்தபின் குளித்து, நைவேத்திய பால், சர்க்கரை பொங்கல் எடுத்துக்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அன்றைய மாலை முருகன் பாடல்கள் பாடி, கந்தசஷ்டி கவசம், “சரவண பவனார்” பாடலை பாராயணம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
