இன்று இரவு ‘ரிங் ஆஃப் ஃபயர்’ ... இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!
சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் போது சூரியனை முழுமையாக மறைத்து விடும். ஆனால், சந்திரன் தொலைவில் இருக்கும் போது சூரியனின் நடுப்பகுதியை மட்டுமே மறைத்து நெருப்பு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வு ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிஜி, சிலி மற்றும் பிற பகுதிகளில் நேரடியாக காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணத்தை பார்க்கவும் முடியாது, தென்படவும் செய்யாது என்கின்றனர்.
ஜோதிடர் பண்டிட் சந்தீப் பராசரின் கூற்றுப்படி, சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பிருந்து அது முடியும் வரையிலான காலம் சூதக் காலம் என அழைக்கப்படுவதால் இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் தடை செய்யப்படும். இந்தியாவில் கிரகணம் தெரியாததால், சூதக் காலமும் செல்லாது என்கின்றார்.இந்தியாவில் வசிக்கும் மக்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாக காண முடியாது. ஆனால் விஞ்ஞான தளங்களில் நேரலையில் பார்க்கலாம் என்கின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!