கடன் தவணை கட்ட சொல்லி டார்ச்சர்.. விரக்தியில் வங்கி அதிகாரிகள் முன் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை!

தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயி ஜாதவ் ஜகோராவ். தனது ஐந்து ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து அடிலாபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் ரூ.3,50,000 கடன் வாங்கியுள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை தவணை முறையில் ரூ.25,000 செலுத்த வேண்டியிருந்தது. கடைசி இரண்டு தவணைகளையும் ஜாதவ் செலுத்தவில்லை.
இதனால், வங்கி அதிகாரிகள் பணத்தை செலுத்துமாறு கூறி தொல்லைக் கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் விரக்தியடைந்த ஜாதவ் வங்கியில் இருந்த அதிகாரிகள் முன்னிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதைக் கண்ட அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர் விஷம் குடித்துவிட்டு அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ஜாதவை ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜாதவ் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!