நெகிழ்ச்சி வீடியோ.. மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி நடனம்!

 
வினோத் காம்ப்ளி

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், செவிலியரின் உற்சாகத்திற்கு செவிசாய்த்து, உற்சாகமாகவும், ஆர்வமுடனும் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக தானேயில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 52.


அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து, சிறுநீர் பாதையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த அவர் ஒரு பெண்ணுடன் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வினோத் காம்ப்ளி விளையாடிய காலத்தில் சிறந்த வீரராகப் பாராட்டப்பட்டார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும், 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி  10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார். இருப்பினும் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு, தனிப்பட்ட முறையில் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தார். மதுவுக்கு அடிமையானார். அவரை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் காம்ப்ளி ஒத்துழைக்கவில்லை. இதனால் அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web