வாகன ஓட்டிகளே இந்த பக்கம் போகாதீங்க ... சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 25ம் தேதி இன்று இங்கிலாந்து - இந்தியா டி20 போட்டி நடக்க உள்ளன. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2வது போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று ஜனவரி 25 ம் தேதி நடைபெறுகிறது. 2024 செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் முறையாக நடைபெறும் சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!