வருட கடைசியில் பெரும் சோகம்... 181 பேருடன் சென்ற விமானம் ரன்வேயில் விபத்து.. 29 பேர் பலி... அதிர்ச்சி வீடியோ!
வருடம் நிறைவடைய உள்ள நிலையில் பெரும் சோகமாக தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் ரன்வேயில் விபத்திற்குள்ளாகி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைக்க செய்கிறது.
தென் கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் விலகி அங்கிருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board pic.twitter.com/9rQUC0Yxt8
— BNO News (@BNONews) December 29, 2024
தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம் ரன்வேயில் விபத்துக்கு உள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளனதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்தில் 29 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216- என்ற விமானம் தென் கொரியாவுக்கு வந்தது. தென் கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்த நிலையில், விமானத்தில் 175 பயணிகள், 6 பணியாளர்கள் என மொத்தம் 181 பயணித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங்க் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம், ரன்வேக்கு பக்கவாட்டில் இருந்த சுவரில் மோதியது. இந்த பயங்கர விபத்தில், விமானம் சுவரில் மோதிய அடுத்த நொடியிலேயே தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்து கரும்புகைகள் வெளியேறியது.
பயணிகளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தவர்கள், விமான நிலையத்திற்குள்ளேயே விமானம் விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். விமானம் விபத்திற்குள்ளனாதுமே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 29 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
விமான விபத்து தொடர்பாக உடனடியாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். விமானம் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க செய்கிறது. அந்த வீடியோவில் விமான ஓடுபாதையில் வேகமாக சென்று கொண்டிந்த விமானம், திடீரென ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த சுவரில் வேகமாக மோதுகிறது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக இன்று அதிகாலையில் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!