குஜராத்தில் சோகம்... டிவைடரில் பேருந்து மோதி 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்!
நேற்று துவாரகா அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Tragic news from #Dwarka, where a devastating #accident claimed 7 lives and left over 30 injured. My deepest condolences to the bereaved families, and wishing a swift recovery for the injured. pic.twitter.com/Se2yCykhpC
— Parimal Nathwani (@mpparimal) September 28, 2024
குஜராத்தில் உள்ள துவாரகா-கம்பலியா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சாலை டிவைடரில் மோதி அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், நடுரோட்டில் திடீரென திரிந்த மாட்டைக் காப்பாற்றும் எண்ணத்தில் பேருந்து ஓட்டுநர் முயற்சித்தபோது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை டிவைடரின் மீது பயங்கர வேகத்தில் மோதி இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் மீது மோதியதால் அடுத்தடுத்து விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளின் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!