சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ... 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
தெலுங்கானா மாநிலத்தில் பெத்தபள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று இரும்பு தாது ஏற்றிச்சென்றது. இந்த ரயில் ராகவபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அகோலா மற்றும் அகோட்டில் இருந்து புறப்படும் 6 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. மதுரை - நிஜாமுதீன் ரயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது. பிலாஸ்பூர்-நெல்லை ரயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது. மேலும் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!