திறக்கப்படாத ரயில் கதவுகள்.. ஆத்திரத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய மகா கும்பமேளாவுக்கு சென்ற பயணிகள்!

 
மகா கும்பமேளா ரயில்

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் சத்தர்பூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மகா கும்பமேளா நடைபெறும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் 3,000க்கும் மேற்பட்ட ரயில்கள் சிறப்பு ரயில்கள் ஆகும். புனித நீராடுவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இன்று மவுனி அமாவாசை என்பதால், வட மாநிலங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மற்றும் ஹர்பால்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு வந்த சிறப்பு ரயில்களின் கதவுகள் ஏற்கனவே பயணிகளால் நிரம்பியிருந்ததால், கதவுகள் திறக்கப்படவில்லை.

கும்பமேளா

ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் பெட்டிகளின் கதவுகளைத் திறந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மகா கும்பமேளாவில் குளிப்பதற்காக சத்தர்பூரிலிருந்து பிரயாக்ராஜுக்குச் சென்ற பயணி ஆர்.கே. சிங், "ரயில்வே போலீசார் ரயிலின் கதவுகளைத் திறந்தனர். ரயில் ஏற்கனவே கூட்டமாக இருந்ததால் பலரால் ரயிலில் ஏற முடியவில்லை" என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web