எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் பயணிகள் போராட்டம்!

 
எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் பயணிகள் போராட்டம்!


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து, மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி ரயில் பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


முழு ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் விமானம், ரயில், மற்றும் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரக்கோணம் மற்றும் காட்பாடி பகுதியில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு லட்சக்கணக்கானோர் ரயிலில் வேலைக்காகச் சென்று வருகின்றனர்.


இவர்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி, அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web