நாளை தாம்பரம் - சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை ரத்து!
தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார ரயில்கள் பொது போக்குவரத்தில் முக்கியமானதாக இருக்கின்ரன. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்பவர்களுக்கான முக்கிய போக்குவரத்து சேவையாக இந்த ரயில் சேவை இருந்து வருகிறது.
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படும். அந்த வகையில் தற்போது தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையில் நாளை செப்டம்பர் 22ம் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை தாம்பரம் - கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை நாளை செப்டம்பர் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!