சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் !
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்கமாக செல்லக் கூடிய தண்டவாள இணைப்பில் திடீர் சிக்னல் கோளாறு ஏற்பட்டது . இதனையடுத்து அரக்கோணம் வழியே சென்னை செல்லக் கூடிய ரயில்கள் ஒரு மணிநேரத்துக்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதனால் பணிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வழியாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணத் திட்டமிட்டுள்ள பயணிகளும் சிரமம் அடைந்தனர்.
சிக்னல் கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்த பின் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!