டிக்கெட்டுக்கு காசில்லை.... ரயிலுக்கு அடியில் 290 கி.மீ தூரம் பயணித்த நபர்!

 
மத்திய பிரதேச ரயில் நபர்

மத்தியப் பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் 290 கிலோ மீட்டர் தூரம் ரயிலுக்கு அடியில் மறைந்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இட்டார்ச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கி.மீ தூரம் இரண்டு பெட்டிகளுக்கு இடையே சக்கர இடைவெளியில் மறைந்திருந்து பயணம் செய்தார்.


இபல்பூர் ரயில் நிலையம் அருகே கேரேஜ் மற்றும் வேகன் (சி&டபிள்யூ) துறை ஊழியர்கள் நடத்திய ரோலிங் சோதனையின் போது, ​​ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் மறைந்திருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

ரயில்

அவரை ரயிலுக்கு அடியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ARBIF அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web