மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி... டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமான நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்