திரிகோண ராஜயோகம்... அத்தனையும் மாறப் போகுது... இந்த ராசிக்காரர்களுக்கு இனி எதிலும் வெற்றி!

 
சுக்கிரன்

கடந்த செப்டம்பர் 23ம் தேதி துலாம் ராசியில் சுக்கிர பகவான், கன்னி ராசியில் புதன் பகவான், கும்பம் ராசியில் சனி பகவான் பெயர்ச்சியாகி உள்ளனர். இந்த  மூல திரிகோண அமைப்பு காரணமாக குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.  

ஜோதிட சாஸ்திரத்தில்  மூல திரிகோண வீட்டில் இருக்கும் சனி, புதன், சுக்கிரன், 5 முக்கிய ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளை உருவாக்கித்தரப் போகின்றன.  

மேஷம்  

மேஷ ராசிக்காரர்களே, மூல திரிகோண வீடுகளில் சனி, புதன், சுக்கிரன் அமர்ந்து இருப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். அதிக செல்வத்தால்  நீண்டகால ஆசைகள் நிறைவேறப் பெறுவீர்கள். பிசினஸில் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். பணியிடத்தில்  ஆதரவு பெருகும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

கன்னி  

கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கான அதிபதியே புதன் தான்.இந்த காலகட்டத்தில்  தொழிலில் முன்னேற்றம் பெருகும்.  வீட்டில்  பண பிரச்சனைகள் குறையும். புதிய முயற்சிகளில் நற்பலன்களைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

3. துலாம்  

துலாம் ராசிக்காரர்களே இந்த காலகட்டத்தில் உருவாகியுள்ள மூல திரிகோண அமைப்பு காரணமாக  தொழிலில் முன்னேற்றம் கிட்டும். புதிய திட்டங்கள் மூலம் பணவரவு பெருகும்.  பணியிடத்தில் பணிச்சுமை குறைந்து ஆதரவு பெருகும்.  பதவி உயர்வு பாராட்டுக்கள் அதிகரிக்கும். 

ராசிபலன்கள் ஜோதிடம்

4. கும்பம்  

கும்ப ராசிக்காரர்களே இந்த காலகட்டத்தில் கடுமையான உழைப்பின் மூலம்  வெற்றி பெறுவீர்கள்.  பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் வியாபாரம் செழிக்கும்.  எதிரிகளை சமாளித்து  எடுத்த காரியத்தை சாதகமாக முடிப்பீர்கள்.  இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். 

5. மீனம்  

மீன ராசிக்காரர்களே திரிகோண அமைப்பு காரணமாக இதுநாள் வரை நீடித்து வந்த வம்புகள், வழக்குகள், சச்சரவுகள், சண்டைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய தொடக்கத்திற்கு வழி வகுக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளில் சாதகமான முடிவுகளை எட்டுவீர்கள்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web