2 நாட்களுக்கு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை !

 
ஸ்டாலின்
 

 

நாளை மறுநாள் அக்டோபர் 30ம் தேதி புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில்  தேவர் ஜெயந்தி  விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக  முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.  இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மதுரை மாவட்ட நிர்வாகம்  பிறப்பித்துள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி  ராமநாதபுரம் செல்ல முதல்வர்  சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் நாளை இரவு  வருகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும்  நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு   2014 ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது. முதல்வர் வருகைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 4 துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

மதுரை மாநகர் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  ட்ரோன் கேமிராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து  மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழுசோதனைக்குப்பின்பே அனுமதிக்கப்படும்.

ஸ்டாலின்

எனவே, பயணிகள்  சற்று முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள்  யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி  மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web