இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை... சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

 
ட்ரோன்

 இன்று ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய துணை ஜனாதிபதி சென்னை வருகை தர இருக்கிறார். இதனையடுத்து சென்னை பெருநகர காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில்   "இந்திய துணை ஜனாதிபதி ஜனவரி 31ம் தேதி சென்னைக்கு வருகை தந்து, அதே நாளில் முட்டுக்காடு மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்

ட்ரோன்

 2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

உக்ரைன் ட்ரோன்
இதனால் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழி தடங்கள் "சிவப்பு மண்டலமாக" அறிவிக்கப்பட்டுள்ளன.  அந்த  வழித் தடங்களில், ரிமோட்லி பைலட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம்ஸ் (RPAS) ட்ரோன் ஆளில்லா விமானம், பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது” என காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web