இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இரு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து லாரி சக்கரங்களில் சிக்கிக் கொண்டனர். இதில் பெண்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இரு பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!