வேன் மீது லாரி மோதி கோர விபத்து... 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

 
ஆட்டோ விபத்து

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நேற்று ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ, மாநில நெடுஞ்சாலையில் இருந்து கோகுண்டா-பின்ட்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் எதிரே வேகமாக வந்துக் கொண்டிருந்த கனரக லாரி பயணிகளின் ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 13 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 5 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆட்டோ விபத்து

8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்று தலைமறைவானதாக தெரிகிறது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகிறார்கள்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web