லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி.. 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!
தூத்துக்குடியில் லாரி ஓட்டுநரை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்த மூவர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன், தூத்துக்குடி தனியார் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த இரவே, லாரியில் இந்திய உணவுக் கழகம் (FCI) கிடங்கு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்மநபர்கள் லாரியை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து, அவரை அரிவாளால் தாக்கி காயப்படுத்தி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.4,500 பணத்தை பறித்துக் கொண்டு கும்பல் தப்பிச் சென்றது. காயமடைந்த கமலக்கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
