கார் மீது வேகமாக மோதிய லாரி.. தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் உடல் கருகி பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கார் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெக்சாஸில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பென்டன்வில்லை நோக்கி சென்றனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த ஆர்யன் ரகுநாத், ஃபரூக் ஷேக், லோகேஷ் பாலச்சார்லா, தமிழகத்தை சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் என அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளனர்.
பென்டன்வில்லில் வசித்த ஆர்யன் மற்றும் ஃபரூக் இருவரும் டல்லாஸில் உள்ள ஆர்யனின் உறவினர்களைப் பார்க்கச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், லோகேஷ் தனது மனைவியையும், தர்ஷினி தனது தாய் மாமாவையும் பார்க்க பெண்டன்வில்லுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி அவர்கள் கார் மீது மோதியது. தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது கார் மோதி தீப்பிடித்தது. காரில் இருந்தவர்கள் தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெளியே வர முடியாமல் தீயில் கருகி இறந்தனர்.
இறந்தவர்கள் பற்றிய விவரம் இப்போதுதான் தெரியும் என்பதால் அமெரிக்கா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள போலீசார், டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகே அவர்களது உடல்கள் அடையாளம் காணப்படும் என்று கூறியுள்ளனர். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தர்ஷினியின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தர்ஷினியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!