புதிய அரசில் எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி... டிரம்ப் அறிவிப்பு!

 
ட்ரம்ப்
 


அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவில் அமையும் புதிய அரசில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் வருகிற ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

ட்ரம்ப்

2வது முறையாக அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், தனது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது உற்ற நண்பரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரும், அரசியல்வாதியுமான விவேக் ராமசாமிக்கு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகத்தான எலான் மஸ்க்கும், அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இந்த 2 அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள்.

இது ‘சேவ் அமெரிக்கா’வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இருவரும் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்.

ட்ரம்ப்

அரசின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். மேலும், பெரிய அளவிலான சீர்திருத்தங்களுக்கு வெள்ளை மாளிகை, மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் சேர்ந்து தொழில்முனைவோர் இடையிலான ஒரு அணுகுமுறையை உருவாக்கும். இந்த அரசு இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இருக்கும்.

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் இணைந்து அரசின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக்குவார்கள்” என்று டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றப்போகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை விவேக் ராமசாமி பெற்றுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web