ட்ரம்பை கொல்பவர்களுக்கு ரூ.1.25 கோடி சன்மானம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி!

 
ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார். ஒரு முறை அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், மர்ம நபர் ஒருவர் அவர் கோல்ப் மைதானத்தில் இருந்த போது, அவரும் துப்பாக்கியால் சுடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது டொனால்டு டிரம்பைக் கொல்பவர்களுக்கு ரூ.1.25 கோடி வரை சன்மானம் வழங்கப்படும் என்று கடிதம் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொலைச் செய்ய 2 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ட்ரம்ப்

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது ஒரு வீட்டில் வெடிமருந்து பெட்டி மற்றும் பிற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு கடிதமும் சிக்கியது. அந்த கடிதத்தில்  ட்ரம்பை படுகொலை செய்ய எனது எல்லா முயற்சிகளையும் பயன்படுத்துவேன், என்னால் முடியாவிட்டால், நீங்கள் இதைச் செய்யுங்கள். நான் உங்களுக்கு 1.25 கோடி ரூபாய் தருகிறேன் என்று எழுதி இருந்தனர்.

 வீட்டு உரிமையாளர் பெயர் ராயன் என்பதும் தெரிய வந்தது.மேலும், இந்த பெட்டி கிடைத்த வீட்டின் உரிமையாளர் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web