ஒரே போடாய் போட்ட டிரம்ப்.. மொத்தமாக சரண்டர் ஆன கொலம்பியா அதிபர்!

 
டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்து புதிய திட்டங்களை செயல்படுத்த உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அவற்றில் ஒன்று அமெரிக்க குடியேற்றக் கொள்கை. அதாவது, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க உத்தரவிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படுகிறார்கள்.

டிரம்ப்

அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை கொலம்பியாவிற்கு நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நாடுகடத்தப்பட்ட குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்களை கொலம்பியாவில் தரையிறங்க அந்நாட்டு அதிபர் அனுமதிக்கவில்லை. "குடியேற்றவாசிகளை பொது விமானங்களில் மட்டுமே அனுப்ப வேண்டும், அவர்கள் இராணுவ விமானங்களில் அனுப்பப்பட வேண்டிய குற்றவாளிகள் அல்ல" என்று ஜனாதிபதி குஸ்டாவோ ஃபெடரிகோ கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொலம்பிய இறக்குமதிகள் மீதான வரியை 25% அதிகரித்து பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கொலம்பியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரிகளில் 25% அதிகரிப்பை அறிவித்தது. கொலம்பியாவின் பொருட்கள் மீதான சுங்க ஆய்வுகளையும், கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகளையும் டிரம்ப் உடனடியாக அறிவித்தார். கொலம்பியா சரணடைந்து, நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது, அமெரிக்கா கொலம்பியா மீதான 25% வரியை வாபஸ் பெற்றதாகக் கூறியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web