திடீரென புத்தராக மாறிய டிரம்ப்... எகிறும் விற்பனை... ரூ.2.30 லட்சம் வரை விலை நிர்ணயம்!

திடீரென டிரம்ப் புத்தராக மாறியதை பார்த்ததுமே ரசித்து அருகில் வந்து கையில் எடுத்துப் பார்க்கிறார்கள் மக்கள். யெஸ் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டொனால்டு டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி.
ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டாலர்கள் முதல் 2,700 டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கலை மற்றும் அரசியலை இணைக்கும் இந்த பீங்கான் சிலைகள், உலகம் முழுவதிலும் உள்ள சிலை சேகரிப்பாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன. நம்மூர் மதிப்பில் சுமார் ரூ.11,000 விலையில் துவங்கி ரூ.2.30 லட்சம் வரை அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி.
முதன்முதலில் 2021ம் ஆண்டில் ஈ-காமர்ஸ் தளமான டோபோவில் இது வைரலாக பரவியது. இந்த சிலைகள் அமேஸான் மற்றும் சீன இணையதள விற்பனை நிறுவனமான டெழுவில் விற்பனைக்கு உள்ளன.
இதுகுறித்து 47 வயதான ஹாங் ஜின்ஷி , "தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பின்னாள்களில் நிறைய ஆர்வம் இருந்தது. முதலில் சிலைகளை நகைச்சுவைக்காக வடிவமைத்தேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பீங்கான் சிலைகளை உருவாக்கியுள்ளேன். டிரம்பின் செயல் முறையும் புத்தர் சிலையின் வடிவமும் 2 எதிரெதிர் வடிவங்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் புன்னகையுடன் வாங்கிச் செல்கின்றனர்" என தெரிவித்துள்ளார். இதனையடுத்து டொனால்டு டிரம்ப் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!