டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.. ஊரை விட்டு காலி செய்யும் மெக்சிகோ மக்களுக்கு பிரம்மாண்ட முகாம் அமைப்பு!

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் பல வியத்தகு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, அமெரிக்காவிற்கு அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதன்படி, அமெரிக்காவிற்கு அகதிகள் வருவது மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுபவர்களை தங்க வைப்பதற்காக, மெக்சிகோ-அமெரிக்க எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டிஜுவானா, ரெய்னோசா, மடமரோஸ் மற்றும் எல் புன்டோ போன்ற இடங்களில் மிகப்பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த 5 நாட்களில் இந்த கூடாரங்களில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெக்சிகோவைச் சேர்ந்த மக்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!