ட்ரம்ப் பதவியேற்பு விழா... ஆபிரகாம் லிங்கனின் பைபிள் மீது உறுதிமொழி !

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார்.
அவரது பதவியேற்பு விழா ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் பயன்படுத்த உள்ள பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போதும், லிங்கனின் பைபிளை கொண்டு டிரம்ப் பதவியேற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கடந்த 2009 மற்றும் 2013 ஆகிய இருமுறை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோதும் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!