டிரம்ப் அடுத்த அதிரடி... சுற்றுலா தலங்களின் பெயரை மாற்றி அறிவிப்பு... மெக்சிகோ கடும் எதிர்ப்பு!

 
டிரம்ப்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, பாரிஸ் பருவநிலை மாற்றம், குடியுரிமை கொள்கைகளில் மாற்றம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் உலக நாடுகள் பெரும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளன. இதனையடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பெயரை மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மெக்சிகோவின் கிழக்கு எல்லையில் மெக்சிகோ குடாவும், மெக்சிகோ நகரில் கடற்கரை பகுதிகள், நகரங்கள், கிராமங்கள் என சிறந்த கலாச்சாரம் மிகுந்த இடங்கள் மற்றும் சுவையான உணவு, அழகான இயற்கை சூழல் ஆகியன பலரும் சுற்றிப் பார்க்கும் சிறந்த இடங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் மெக்சிகோ சுற்றுலா தளங்களின் பெயர்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளார்.

டிரம்ப்

அதன்படி  “அமெரிக்காவின் நீர் நிலைகள் அழிக்க முடியாத பகுதிகள். அவை எண்ணெய் உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு மிக முக்கியமான இடம்” என தெரிவித்துள்ளார். மெக்சிகோ மக்களின் சுற்றுலாத்தளம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரத்தியேகமான இடத்தின் பெயரை மறுபெயரிட்டு இருப்பதாகவும்  அறிவித்துள்ளார்.

“மெக்சிகோவின் வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாகவும், அலாஸ்காவை டேனாலியை மவுண்ட் மெக்கின்லி” எனவும் மாற்றி ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு மெக்சிகோ மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  

டிரம்ப் வெற்றி

இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில், “பூர்வீக மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை மாற்றி பூர்வீக வரலாறு அழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதிபரின் ஆரம்ப கால நிர்வாக நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருந்த இந்த மாற்றங்கள் அமெரிக்க பாரம்பரியத்தை மீட்டெடுப்பதாக கூறிய தேர்தல் பிரச்சார உறுதியை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web