ஆடு, கோழியுடன் திருப்பரங்குன்றம் மலை ஏற முயற்சி.. முஸ்லிம்களை தடுத்து நிறுத்திய போலீசார்!

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. மலையின் அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், மலையின் நடுவே ஒரு சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவும் உள்ளன. இந்த நிலையில், முஸ்லிம்கள் இன்று ஆடு மற்றும் கோழிகளுடன் திருப்பரங்குன்றம் மலையில் ஏற முயன்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மசூதிக்கு ஆடு மற்றும் கோழிகளை கொண்டு சென்று பலியிட அனுமதி இல்லை என்று போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர். சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையில் ஆடு மற்றும் கோழிகளை வெட்டுவதையும் இந்து அமைப்புகள் எதிர்த்தன.
இந்த நிலையில், தடையை மீறி ஆடு மற்றும் கோழிகளுடன் திருப்பரங்குன்றம் மலையில் ஏற முயன்ற பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முஸ்லிம்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மலையில் உள்ள தர்காவில் மட்டுமே வழிபட போலீசார் அனுமதித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!