அமளி துமளி... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்... S.I.R. விவகாரத்தில் மக்களவையில் இன்று விவாதம்!

 
பிரதமர் மோடி

இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற உள்ளதால், ரவுண்ட் கட்ட எதிர்கட்சிகள் தயாராகி செல்கின்றன.  

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்த விவாதத்தை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

நாடாளுமன்றம் மக்களவை

முதல் நாளில் காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், ஜார்ஜியா நாட்டு எம்.பி.க்கள் குழுவைச் சபாநாயகர் ஓம். பிர்லா வரவேற்றார். கேள்வி நேரம் தொடங்கிய உடனேயே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து, எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். சபாநாயகர் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தும் அமளி தொடர்ந்ததால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

அமளிக்கு மத்தியில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு பேசுகையில், "எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துள்ளோம். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்சினைக்காக மற்ற முக்கியமான பிரச்சினைகளைப் புறக்கணிக்கக் கூடாது; காலக்கெடு விதிக்கவும் கூடாது" என்று வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு விவாதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின:

நாடாளுமன்றம் பாராளுமன்றம்

இந்நிலையில் இன்று டிசம்பர் 9 (செவ்வாய்க்கிழமை): எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெறும். இதற்காக 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10: இந்த விவாதங்களுக்கு மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேவால் பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், இரண்டு நாட்களாக அமளியில் முடங்கிப்போன நாடாளுமன்றம், இனி சுமூகமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!