விண்வெளியில் வான்கோழி கறி விருந்து.. நன்றி தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்!
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் 8 நாட்களில் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அவர்களை ஐந்து மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சுனிதாவின் உடல் எடை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இது உண்மையல்ல என்று நாசா பின்னர் மறுத்தது.
"We have much to be thankful for."
— NASA (@NASA) November 27, 2024
From the @Space_Station, our crew of @NASA_Astronauts share their #Thanksgiving greetings—and show off the menu for their holiday meal. pic.twitter.com/j8YUVy6Lzf
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபோதே நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடினார். விவசாய அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று நன்றி விழா கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ், காணொளி மூலம் பூமியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
நாசா வீடியோவை வெளியிட்டுள்ளது. நன்றி இரவு விருந்தில், சுனிதா மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள்கள், வான்கோழி கறி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர் மற்றும் காளான்கள் ஆகியவை பரிமாறப்பட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!