லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்துடன் தவெக கட்சிக் கொடியேற்றினார் விஜய்!
தமிழகமே ஆர்வமாக எதிர்பார்க்கும் தவெக மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக தொடங்கியது. தமிழக வெற்றிகழகத்தின் முதல் அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக விக்ரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. தவெக மாநாட்டில் இதுவரை சுமார் 8 லட்சம் பேர் வருகை தந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் கரகோஷத்துடன் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றியுள்ளார். தலைவா, தலைவா என தொண்டர்கள் உற்சாகத்துடன் கூவி கட்சிக்கொடிப் பாடலும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
முன்னதாக, மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கட்சி தலைவர் விஜய் நேற்று முதல் மாநாடு வளாகத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தார். அத்துடன் மாநாடு பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்தார். இன்று 2வது நாளாக மாநாடு நடைபெறும் இடத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்த நிலையில், தற்போது மாநாட்டில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார்.
எப்போது மாநாடு தொடங்கும் என தொண்டர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மாநாடு சரியாக 3 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கும் இந்த மாநாட்டிற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபனா கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
எப்போது விஜய் வருவார் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். கட்சி பாடல் ஒலிக்க தொண்டர்களின் தலைவா…தலைவா என்ற கரகோஷத்துடன் விஜய் மாநாடு நடைபெறும் மேடைக்கு 800 மீ ரேம்ப் வாக்கில் வருகை தந்தார். தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். தொண்டர்கள் தூக்கி எறிந்த கட்சிக் கொடியை தோள்களில் போட்டுக் கொண்டார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!