விஜய் டிசம்பர் 16 ல் ஈரோட்டில் சுற்றுப்பயணம்… செங்கோட்டையன் அறிவிப்பு!

 
sengottaiyan
 

தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “எதிர்கால தமிழகத்தை இளைஞர்களின் எழுச்சியோடு உருவாக்க வரும் நாயகன் விஜய், டிசம்பர் 16-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” என தெரிவித்தார்.

செங்கோட்டையன்

இந்த நிகழ்ச்சிக்காக, வாரி மஹால் அருகே உள்ள தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நிகழ்ச்சிக்கு அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்ததும், நிகழ்ச்சிக்கான பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

செங்கோட்டையன்

மேலும், “ரோடு ஷோ நடத்தப்படாது. முழுவதும் தனியார் இடத்திலேயே நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் சக்தியே விஜயை அரியணையில் அமர்த்தும். மூத்த தலைவர் என்பதால், வேறு எந்தக் கட்சி குறித்தும் பேசுவது சரியல்ல” என அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!