திருமணமாகாத வருத்தம்... இரட்டை சகோதரிகள் விஷம் குடித்து உயிரிழந்த சோகம்!

 
விஷம்
 

தமிழகத்தில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்கிற ஏக்கத்தில் விஷம் குடித்த இரட்டையர் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் காமாட்சி ஜோதிடர் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60), கூலித் தொழிலாளியான இவருக்கு பாமா (34), ருக்மணி (34) என்ற இரட்டையர் மகள்கள் இருந்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், 34 வயதாகியும் தங்களுக்கு இன்னும் திருமணமாகாததால் இரட்டையர் சகோதரிகள் வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.இதனால் மனவேதனையடைந்த சகோதரிகள் இருவரும் கடந்த 30ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தனர். விஷம் அருந்தி வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த இருவரையும் உறவினர்கள், மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ருக்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை பாமாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web