அட!! பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகின. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 7797 மாணவர்களும், 7618 மாணவிகள் என மொத்தம் 15 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 6700 மாணவர்களும், 7038 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன்-தீனா தம்பதி. இவர்களுருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2தாக இரட்டை பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர் இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர். இதில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இரட்டையர்கள் இருவரும் தேர்வு முடிவுகளில் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்றது அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!