ஒரே நம்பர் ப்ளேட் கொண்ட 2 கார்கள்... தாஜ் ஹோட்டலில் பெரும் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாஜ் ஹோட்டலில் ஒரே நம்பர் பிளேட்டில் 2 கார்கள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஹோட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த 2 கார்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் “ சாகிர் அலி அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில் கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வந்துள்ளது” இது குறித்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஹோட்டலில் சாஹிர் அலி பார்த்து, அதை நிறுத்த முயற்சித்தார்.
பின்னர் காவல் துறையினர் 2 காரையும் நிறுத்தி உள்ளனர். சாகிர் அலியின் கார் பதிவு எண் MH01EE2388 என்றும், மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் தனது காரின் கடைசி நம்பரை 8 என்று மாற்றி உள்ளதாக மற்றொரு கார் ஓட்டுனரின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!