பரபரப்பு... ரூ5,00,000/- ரொக்கப்பணத்துடன் முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது !

 
டெல்லி


இன்று தலைநகர் டெல்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு   காலை  7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முனைப்போட்டி இந்த தேர்தலில் நிலவி வரும் நிலையில்  ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தன.


டெல்லியில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்  இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, டெல்லி முதல்வர் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள்  , "பணம் எடுத்துச் செல்வதாக எங்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் பிடித்தனர். முதற்கட்ட தகவலின்படி, பிடிபட்ட கௌரவ் மற்றும் அஜீத் இருவரும் டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர்.  

அதிஷி


அவர்களிடமிருந்து ரூ 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எங்கிருந்து அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒருவர் முதல்வரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்றும், மற்றொருவர் ஓட்டுநர் என்றும் தெரிய வந்துள்ளது" என்றனர். தேர்தல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web