கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற கொடூரம்!

 
ரயில்

ரக்ஸ்பிரஸ் ரயிலில் 2 வயது குழந்தையை தனியே விட்டு விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து ரயில்வே  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து கோவை சென்றடைந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில் நிலையத்தை அடைந்ததும், ​பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அதன் பின்னர் ரயிலைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது, தனியாக தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

ரயில் நிறுத்தம்

அதன் பின்னர் குழந்தையை மீட்டு, இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். குழந்தையை ரயிலில் கொண்டு சென்றது யார், எதற்காக குழந்தையை விட்டுச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

குழந்தை

இந்நிலையில், குழந்தை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையை விட்டுச் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web