5 நாட்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
வடகிழக்கு பருவமழையால் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இடம்பெயர்ந்த மண் மற்றும் பாறைகள் மலை ரயில் பாதையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் மேட்டுப்பாளையம்–உதகை மலை ரயில் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. அடர்லி மற்றும் ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையே 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பின்னர் ரயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு, பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்ததையடுத்து ரயில் பாதை பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, ஐந்து நாட்களின் இடைவெளிக்குப் பிறகு இன்று மேட்டுப்பாளையம்–உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு, மலைப்பகுதியின் அழகை ரசித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
