பொங்கலன்று நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் இன்று துவக்கம்!

 
யுஜிசி

யுஜிசி நெட் தேர்வுகள் இன்று துவங்குகிறது. முன்னதாக பொங்கல் விடுமுறை தினங்களில் நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள், தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகளும், அதிருப்தியும் எழுந்ததன் தொடர்ச்சியாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வுகள் இன்று ஜனவரி 21ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.

கல்லூரி பெண்கள் யுஜிசி

அந்த வகையில் இதற்கான தேர்வுகள் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாட்களில் உள்ள யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் இன்று ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web