அட.. ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு?.. வீல் சேரில் அழைத்து செல்லும் வீடியோ காட்சி வைரல்!

 
ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனாவை சக்கர நாற்காலியில் அழைத்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு, நடிகை ராஷ்மிகா மந்தனா ‘சாவா’ படத்தில் நடிக்கிறார். இந்த பாலிவுட் படத்தில் விக்கி கௌஷல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


‘மிமி’ படத்தை இயக்கிய லக்ஷ்மன் உத்தேகர் இந்த படத்தை இயக்குகிறார். மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் சாய்பாயின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இதில், நடிகர் விக்கி கௌஷல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும், ரஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாயாகவும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஷ்மிகா

இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகா சக்கர நாற்காலியில் வந்தார். ரசிகர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம், சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ராஷ்மிகா படப்பிடிப்புக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இருப்பினும், காயம் இருந்தபோதிலும், அவர் 'சாவா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்தார். இதன் காரணமாக, அவர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web