பாலியல் குற்றங்களுக்கு துணைபோன இங்கிலாந்து பிரதமர்.. போட்டுடைத்த எலான் மஸ்க்!

 
எலான் மஸ்க்

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,  சிபிஎஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்தபோது, ​​ இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பாகிஸ்தான் கும்பல் உறுப்பினர்களுக்கு உடந்தையாக இருந்ததாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.


இது தொடர்பாக தனது X பக்கத்தில் மொத்தம் 23 பதிவுகளை பதிவிட்டுள்ள எலோன் மஸ்க், பிரிட்டன் மன்னர் சார்லஸ் கெய்ர் ஸ்டார்மரை உடனடியாக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டரில் குற்றவியல் கும்பல் விசாரணைகளை அரசாங்கம் கையாளவில்லை என விமர்சிக்கும் எலான் மஸ்க், இதற்காக அந்நாட்டு பிரதமரை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “இங்கிலாந்தில் பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களை சுமத்த, காவல்துறைக்கு கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸின் அனுமதி தேவை.

சில கும்பல் உறுப்பினர்கள் நீதியை எதிர்கொள்ளாமல் இளம் பெண்களைச் சுரண்ட அனுமதிக்கப்பட்டபோது இந்த சிபிஎஸ் அமைப்பின் தலைவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அது (தற்போதைய பிரதமர்) கெய்ர் ஸ்டார்மர். 2008 முதல் 2013 வரை இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். இன்னும் பலாத்கார கும்பலை விசாரிக்க மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அதை விசாரித்தால் உண்மையான காரணம் வெளியுலகிற்கு தெரியவரும். அதாவது, கெய்ர் ஸ்டார்மர் [அந்த நேரத்தில் CBS இன் தலைவர்] மீதான குற்றப்பத்திரிக்கைக்கு வழிவகுக்கும் என்பதால் அவர்கள் விசாரிக்க மறுக்கிறார்கள்.

கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸின் தலைவராக அவர் ஆறு ஆண்டுகள் இருந்தபோது, ​​ஸ்டார்மர்  கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்தார். ஸ்டார்மர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். பிரிட்டன் வரலாற்றில் மிக மோசமான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மன்னர் சார்லஸ் நேரடியாக தலையிட வேண்டும். “அந்த நாட்டின் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இதனால் பிரிட்டன் அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web