ரஷ்யா மீது அடுத்தடுத்து குண்டு வீசிய உக்ரைன்.. 5 பேர் பலி.. 37 பேர் படுகாயம்!

 
ரஷ்யா பாலம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக ரஷ்யா மீதான தாக்குதல்களை உக்ரைன் அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்யா ஹெலிகாப்டர்

சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பெல்கொரோட் பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளட்கோவ் கூறுகையில், பெல்கொரோட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் விரிவான பொருள் சேதம் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் கூறுகையில், "உக்ரைனில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6 குழந்தைகள் உட்பட 37 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web