ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய தடை.. இஸ்ரேல் அதிரடி உத்தரவு!

 
இஸ்ரேல்

இஸ்ரேல்-காசா போரில், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாவும் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களை அழிக்கும் வகையில், இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரும் பிரதான தளபதியும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பதிலடி கொடுப்பதாக ஈரான் கூறியிருந்த நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.


ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது. இதனால் அங்கு போர் மூண்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர்  அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதை செய்யாமல் அமைதியாக இருக்கும் எவருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் பதிக்க உரிமை இல்லை.

ஹிஸ்புல்லா ஹவுதியும் இப்போது ஈரானின் பயங்கரவாத ஆதரவாளரும் இஸ்ரேலின் வரலாற்றில் ஒரு கறையாக நினைவுகூரப்படுவார்கள் என்று  கூறினார். இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொன்று விடுவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ள நிலையில், ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web