பெற்ற குழந்தையை காண முடியாத ஏக்கம்.. 4 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட தாய்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கருவுற்ற சுரோகவிற்கு கடந்த 23 ம் தேதி பிரவச வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்றிரவு சுரேகாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சுரேகா தனது மற்றோரு குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (30.09.2024) மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றுள்ளார்.
அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சுரேகாவை மீட்டு, அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தவமிருந்து பெற்ற குழந்தை பார்க்க முடியாத ஏக்கத்தில், 4 வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்படி திறக்கப்பட்டிருந்தது என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது. பிரசவ வார்டில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுதாகியதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் சுரேகா நான்காவது மாடியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார் அவரோடு அவரது தாயும் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!