பகீர்... சிறுவனை மது அருந்த வைத்து, முகநூலில் வீடியோ பதிவிட்ட சித்தப்பா!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, சிறுவனையும் மது குடிக்க வைத்து அதை வீடியோவாக பதிவிட்டு, முகநூலில் பதிவிட்ட சித்தப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உடனடியாக வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்திரவிட்டார்.
அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபர் ஃக்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதூர் உத்தமனூரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அஜீத்குமார் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சிறுவன் மது அருந்தும் வீடியோவை பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அஜீத்குமாரை காணக்கிளியநல்லூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் அஜீத்குமாரின் சகோதரர் பிரசாத் என்பவர் பொங்கல் தினத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது அவரது மகனுக்கும் மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து அஜீத்குமாருக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இதனையடுத்து அஜீத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!