இன்ஸ்டாவில் ஒருவருக்கொருவர் Unfollow.. மனைவியை பிரியும் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்?

 
சாஹல்

யுஸ்வேந்திர சாஹல் பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் பஞ்சாப் அணியால் மெகா ஏலத்தில் ரூ.18 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அவருக்கும் சாஹலுக்கும் 2020 இல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஒருவரையொருவர் பின் தொடரவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனஸ்ரீ உடனான படங்களை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தனஸ்ரீ சாஹலுடன் (இதுவரை) படங்களை நீக்கவில்லை. அதே சமயம் அவரைப் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

தனஸ்ரீ 2023 ஆம் ஆண்டிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாஹலின் பெயரை நீக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து இவர்களது விவாகரத்து குறித்த வதந்திகள் கடந்த காலங்களில் வைரலானது. இதற்கு பதிலளித்த சாஹல், இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் தனஸ்ரீயுடனான தனது உறவு குறித்து வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

சாஹல் சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர்.

இருப்பினும், சாஹல் மற்றும் தனஸ்ரீ இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே இதை உறுதிப்படுத்த முடியும். தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "விவாகரத்து தவிர்க்க முடியாதது. அது அதிகாரப்பூர்வமாக மாற சிறிது காலம் ஆகும். பிரிந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை தனித்தனியாக தொடர முடிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது’’ என்று கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web