IPLலில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல் விவாகரத்து?! ரசிகர்கள் அதிர்ச்சி!!
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பஞ்சாப் அணியால் மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு எடுக்கப்பட்டிருந்தார் யுஸ்வேந்திரா.
சாஹலுக்கும் தனஸ்ரீக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்தது. சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வலம் வந்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஒருவரையொருவர் பின் தொடரவில்லை. சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனஸ்ரீ உடனான அனைத்து புகைப்படங்களையும், தனது திருமண புகைப்படங்களையும் திடீரென நீக்கியுள்ளார். அதே சமயம் தனஸ்ரீ, இன்ஸ்டாகிராமில் திடீரென சாஹலைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு, அன்ஃபாலோ செய்துள்ளார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
தனஸ்ரீ 2023ம் ஆண்டிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாஹலின் பெயரை நீக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து இவர்களது விவாகரத்து குறித்த வதந்திகள் கடந்த காலங்களில் வைரலானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சாஹல் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர்.
இருப்பினும், சாஹல் மற்றும் தனஸ்ரீ இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே இதை உறுதிப்படுத்த முடியும். தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "விவாகரத்து தவிர்க்க முடியாதது. அது அதிகாரப்பூர்வமாக மாற சிறிது காலம் ஆகும். பிரிந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை தனித்தனியாக தொடர முடிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது’’ என்று கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!