சற்று நேரத்தில் பட்ஜெட் 2025... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். இன்னும் சில நிமிடங்களில் மக்களவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 8 வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!